Select Menu

Slider

Powered by Blogger.

Travel

Travel

Performance

Performance

Cute

Cute

My Place

My Place

Racing

Racing

Videos

Tube

பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்ட 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 118 பேர் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் மூவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் புக்தி குறிப்பிட்டுள்ளார்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட அங்கியுடன், பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் பயங்கரவாதி ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடைபெற்றபோது கல்லூரியில் சுமார் 700 பயிற்சிப் பொலிஸார் இருந்துள்ளனர்.

வெட் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம், விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அதற்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்வரி திருத்தம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மேலதிக 66 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
65 பேர் இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

காணாமற்போனவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணியொன்று திருகோணமலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, காணாமற் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு இந்தக் கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் பட்டித்திடலில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்புப் பேரணி, பிரதேச செயலகம் வரை பயணித்தது.